Thursday, March 02, 2006

இந்தியாவின் வல்லாதிக்க கனவுகளும் புஸ்ஸின் வருகையும் -2

அவர்களின் (அமெரிக்கர்களின்) விருப்பப்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. இந்தியாவின் 30 வருடகால அணு ஆயுத பயன்பாட்டு வரலாற்றின் சரணாகதி இன்று நடைபெற்று விட்டது. ''மைல்கல்" என்றும் :சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது " என்றும் அமெரிக்கர்கள் ( வெள்ளை மாளிகை பேச்சாளர் kelly o'Donnell )கிலாகித்துச் சொல்வது போலவும் இது நடந்தேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு தனித்துவமான உறவு (unique) காதலுக்கு சின்னம் வைத்திருக்கும் இந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் எட்டு மாதங்களாக இரவு பகலாக அயராது பாடுபட்ட பயனை முதல் முறையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அந்தக் கணத்தில் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணு ஆயுத விஞ்ஞானம் மற்றும் கச்சாப் பொருட்கள் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளும். அதன் மூலம் அணு ஆற்றலின் மூலம் பொது தேவைகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.

இதற்காக இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா விரும்பிப் பெற்றுக் கொண்டது இந்தியாவின் அணு ஆயுத உலைகளை சர்வதேசத்தின் பரிசோதனைகளுக்காகத் திறந்துவிட்டிருப்பது. 30 வருடம் கட்டிக்காத்து வந்த வீராப்பு கைவிடப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் தனது அணு ஆயுத செயல் திட்டங்களில் கொண்டிருந்த ஆதிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது என்ற பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவும் அதனையே எதிர்பார்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றது. இக்காலங்களில் இந்தியா அதிக அளவில் விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கின்றது என்று கிலாகித்துப் பேசும் வண்ணம் அமெரிக்கர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளது.

IAEA - சர்வதேச அணு சக்திக் கண்காணிப்பு முகவர் அமைப்பில் இந்தியா , ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளைப் போன்று கையெழுத்திடாத போதிலும் அமெரிக்கர்கள் கூறுவதைப் போல அணு ஆயுத அறிவை வேறு நாடுகளிற்கு விற்பனை செய்வதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே நேரம் அமெரிக்கர்கள் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக்காயாகவே பயன் படுத்த முனைகின்றார்கள்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அரசியல் செல்வாக்கிலும் சேதத்தை விளைவிக்கும் நோக்கிலேயே இந்தியாவை உபயோகப்படுத்த அவர்கள் முன் வந்திருக்கின்றார்கள்.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பாரிய அணு ஆயுத வல்லமைக்கும் பொருளாதார எழுச்சிக்கும் எதிரான அமெரிக்காவின் சொற்படி கேட்கும் "unique roll " பாத்திரத்தை இந்தியா வகிக்கும் வரை அவர்கள் அடைந்த வெற்றி "land mark "என்றும் " historic " என்றும் அமெரிக்கர்கள் சந்தோஷப்படுவது போல மிகவும் சரியானதே.

No comments: