Thursday, March 02, 2006

மெளனம் கலைக்கிறார் வை.கோ -நன்றி குமுதம்

தமிழ்த் தேசியத்தின் தலைவர் வை. கோ தனது மெளனம் கலைத்து 'குமுதம்' வார இதழில் தன் உள்ளம் திறந்து உரையாடி இருக்கின்றார்.

அதே நேரம் வை.கோ தனது வலிமையையும் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அவர் இருப்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலேயே இருப்பதையும் அவர் வார்த்தைகளில் காணக் கூடியதாக இருக்கின்றது.

தி.மு.க வின் உடனான கூட்டினை உறுதிப் படுத்தியிருக்கின்றார். கருணாநிதியின் பின்னால் பிளவு படக் கூடிய தி.மு.க வின் கழகக் கண்மணிகளிற்கு தலைமையேற்கக் கூடிய சந்தர்ப்பத்தை இதன் மூலம் அவர் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதையே என்னால் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது.

அதே வாரப்பத்திரிகையில் சேரன் தெரிவித்திருக்கும் கருத்தினையும் நாம் பார்க்கலாம்.
" வை.கோ ஊழல் இன்னும் அண்டாத ஆத்மா. அவர்கிட்டே மக்களை ஏமாற்றுகிற திட்டம் எதுவும் இல்லை. அவரோட மேன்மை புரியாமல் அவர் ஏதோ ஒரு இடத்தில் போய் ஒட்டிக்கிறார். ஏன் ஒட்டுறீங்க தனியாக நடை போடுங்கன்னு சொன்னேன். தப்பா?"

என்று கேட்டிருக்கின்றார். இது நடிகர் இயக்குனர் சேரன் என்பதற்கு அப்பால் மாறி வரும் தமிழக மக்களுடைய கருத்து என்று தான் சொல்ல முடியும்.

தமிழக அரசியலிலும் வாழ்வியலிலும் மாற்றம் தேவை என்பதை அனைவரும் புரிந்திருக்கின்றார்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டவேண்டிய நேரம் இது. படித்தவர்கள் இளைஞர்கள் களத்தில் இறங்கிப் போராடும் நேரம் இது.

இதே இதழில் பிறிதொரு இடத்தில் வை. கோ பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு ஸ்டாலின்,

" அவரிடத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அவருடைய போராட்டக் குணம்" என்று கூறியிருக்கின்றார்.

போராட்டக் குணமுடைய கறைபடாத தமிழ் தேசியம் பற்றிய தமிழர் பற்றிய அக்கறையுள்ள தலைவர் இருக்கின்றார். அவருடன் சேர்ந்து போராட நாம் தயாரா?

பதில் அளிக்க நல்ல சந்தர்ப்பம் தேர்தலாக எதிரே இருக்கின்றது.

No comments: