Monday, February 02, 2009

முத்துக்குமரன்களும் முத்துவேலர்களும்

தானாடாவிட்டாலும் தசை ஆடும்..அது ஆகாவிட்டால் தசை எரியும் ..முத்துக்குமரன்கள்...

தானாடாவிட்டாலும் தசை நெரியும் முதுகுவலியில் (சாட்டாக) ஒதுங்கும்..முத்து வேலர்கள்...

தமிழ் உணர்வு துரத்த ..தன்னுயிர் தானமாக்கும் முத்துக்குமரன்கள்..
தமிழ் உணர்வு வளர்த்து ... தன் வயிறு வளர்க்கும் முத்துவேலர்கள்..

தன் உறவுகள் துயர் பட ...உயிர் துறக்கும் ..முத்துக் குமரன்கள்..
தன் உறவுகள் கொழுத்துச் சிறந்திட ...உயிர் வளர்க்கும் ..முத்து வேலர்கள்..

ஒப்பிடவே முடியாத ..துயரம் ..கனக்கும் முத்துக்குமரன்கள்...
ஒப்பிடலே இல்லாது ...காறி உமுழும் ...நிலையில் முத்து வேலர்கள்..

முன்னையது ..முத்து...
பின்னையது..சொத்தை..

No comments: